
கோலாலம்பூர், மார்ச் 18 – லண்டனில் நடைபெற்றுவரும் அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் Lee Zii Jia அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றார். அவர் காலிறுதியாட்டத்தில் ஜப்பானின் Kodai Naraoka வை 21 -9, 21 -10, 21 -13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இன்று நடைபெறும் அரையிறுதியாட்டத்தில் Lee Zii Jia சீனாவின் Shi Yuqi-யுடன் மோதுவார்.