
புது டெல்லி, மே 10 – தங்கையுடன் காதலில் இருந்த ஆடவன் ஒருவனுக்கு காதலியின் அக்காவுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட சம்பவம் இறுதியில் தகராற்றில் முடிந்துள்ளது.
திருமணத்தை நிறுத்தாவிட்டால் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வதாக திருமண நாளன்று காதலியான தங்கையிடமிருந்து அழைப்பு பெற்றுள்ளான் மணமகன். பதறிப்போன அந்த ஆடவன் இறுதியில் தனது காதல் பற்றிய விவரத்தை வந்திருந்த அனைவரின் முன்பே கூறிவிட விவகாரம் போலிஸ் வரை சென்று விட்டது.
இறுதியில், போலிஸ் தலையீட்டில் இருவீட்டார் சம்மதத்துடன் தங்கைக்கும் அந்த ஆடவனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த தைரியம் தொடக்கத்திலேயே வந்திருந்தால் , மணமேடை வரை ஒரு பெண்ணை வரவழைத்து இப்படி செய்திருக்க வேண்டாமே என வலைத்தளவாசிகள் அக்காவுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.