Latestமலேசியா

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முயற்சியாக கோலாலம்பூரில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மரங்களைக் கண்காணிக்க வழிகாட்டி முறை

கோலாலம்பூர், மே-8,

தலைநகரில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த மரங்களை அடையாளம் கண்டு கண்காணிக்கும் வழிகாட்டி முறை ஏற்படுத்தப்படவிருக்கிறது.

சாலைப் பயனர்கள் உள்ளிட்ட பொது மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அந்த வழிகாட்டி அவசியம் என, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr Zaliha Mustafa கூறினார்.

கோலாலம்பூர் சுற்று வட்டாரத்தில் 50 முதல் 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரங்கள் அதிகம் உள்ளன; அவை பெரும்பாலும் பார்ப்பதற்கு இன்னமும் செழிப்புடன் கம்பீரமாக காட்சியளித்தாலும், மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய முறையான கண்காணிப்பு அவசியம் என்றார் அவர்.

நேற்று பிற்பகலில் பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்த Jalan Sultan Ismail சாலைக்கு வருகை மேற்கொண்ட போது Dr Zaliha அவ்வாறு சொன்னார்.

சாய்ந்த மரம் 50 ஆண்டுகள் பழையது என்றும், ஈராண்டுகளுக்கு ஒரு முறை அது பரிசோதிக்கப்பட்டு வந்திருப்பதையும் அமைச்சர் உறுதிபடுத்தினார்.

இவ்வேளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் மற்றும் இழப்பீடு குறித்து கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL பின்னர் விரிவாக அறிவிக்கும் என்றார் அவர்.

முன்னதாக பெய்த கனமழையின் போது அந்த ராட்சத மரம் வேரோடு சாலையின் நடுவே சாய்ந்ததில், 17 வாகனங்கள் நசுங்கின.

அவற்றில் சிக்கிக் கொண்டவர்களில் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்த வேளை, 26 வயது e-hailing ஓட்டுநரும் அவரின் காரில் பயணம் செய்த 72 வயது சுவீடன் நாட்டு மூதாட்டியும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

சாய்ந்த மரத்தின் முறிந்த கிளைகள் அருகில் இருந்த மோனோரேல் தண்டவாளத்தில் விழுந்ததில், அந்த ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!