Latestமலேசியா

அசம்பாவிதங்களை தவிர்க்கவே தாய்லாந்து முன்னாள் பிரதமர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது

ஜோர்ஜ்டவுன், செப் 23 – அசம்பாவிதங்களை தவிக்கவே, பினாங்கிற்கு வருகை புரிந்த, தாய்லாந்து முன்னாள் பிரதமர் இருவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதனை பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் சுஹைலி முகமட் சையின் தெரிவித்தார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்களான தாக்சினும், அவரது சகோதரி யிங் லக்கும் அண்மையில் சொந்த விவகாரம் காரணமாக பினாங்கிற்கு வருகை புரிந்தனர். அவர்களின் வருகையின் போது, வேண்டத்தகாத சம்பவங்களை போலீஸ் விரும்பவில்லை.

அவ்வளவு முக்கியமானவர்கள் பினாங்கிற்கு வரும்போது, அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நமது கடமையாகும் என டத்தோ முஹமட் சுஹைலி குறிப்பிட்டார். சில தரப்பினர் அவர்களின் வருகையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனையலாம். குறிப்பாக, ஆஸ்திரேலியாவை செர்ந்த அன்னபூரனி ஜென்கின்ஸ் என்பவர் தனியாக பயணம் செய்த போது, கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

நேற்று முன்தினம், பிற்பகல் மணி ஒன்று வாக்கில், நெரிசல் மிகுந்த Cecil Street பகுதியில், அவ்விருவரும் உள்நாட்டு உணவு வகைகளை சுவைத்தது பலரது கவனத்தை ஈர்த்தது. முன்னதாக, Weld Quay உணவு விற்பனை பகுதிக்கும் அவர்கள் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், அவர்கள் ஏன் மலேசியாவிற்கு வந்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. தாய்லாந்தில் ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அவ்விருவரும், முறையே 2008, 2017-ஆம் ஆண்டுகலில் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறி லண்டனில் வசிப்பதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!