Latestமலேசியா

அசாம் பாக்கி மீது விசாரணை நடத்துவீர்; 48 NGOக்கள் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜன 11 – பங்குகள் வாங்கிய விவகாரம் தொடர்பான சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் MACC யின் தலைமை ஆணையர் Azam Baki க்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென NGO எனப்படும் 48 அரசு சார்பற்ற இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அலிரான், கெராக், பட்ரியோட் , சுவாராம் மற்றும் இதர 44 அரச சார்பற்ற இயக்கங்கள் விடுத்துள்ள ஏழு கோரிக்கைகளில் அசாம் பாக்கிக்கு எதிரான விசாரணையும் அடங்கும். மேலும் அபிம், பெர்சே, சுதந்திர ஊடக மையமான CIJ , ஜி 25 அமைப்பு ஆகியவவையும் எம்.ஏ.சி.சியின் நம்பகத்தன்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கு அசாம் பாக்கிக்கு எதிரான விசாரணை நடத்துவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!