
ஈப்போ, அக் 21 – தாம் பேராக், தம்பூன் (Tambun) நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருப்பதை , டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
பேராக் மாநிலத்தைக் கைப்பற்றும் முயற்சியாக, அத்தொகுதியில் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Ahmad Faizal Azumu -வை எதிர்த்து போட்டியிடவிருப்பதாக அவர் கூறினார்.
எளிதாக வெற்றி பெறக் கூடிய ஒரு தொகுதியில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளில் வாகை சூட நான் விரும்பவில்லை. கட்சியின் தலைவர் என்ற வகையில் தம்பூன் தொகுதியில் நின்று வெற்றி பெற முடியும் என்ற தைரியம் தமக்கிருப்பதாக, பக்காத்தான் ஹரப்பான் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான அன்வார் தெரிவித்தார்.