
கோலாலம்பூர், ஆக 30 -ஸ்தாப்பாக்கிலுள்ள அடுக்ககத்தின் 12 ஆவது மாடியிலிருந்து 14 வயது இளம் பெண் கீழே விழுந்து மரணம் அடைந்தார். நேற்றிரவு மணி 8.20 அளவில் அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக வங்சா மாஜூ ஓ.சி.பி.டி Ashari Abu Samah தெரிவித்தார். வெளிநாட்டைச் சேர்ந்த அந்த இளம் பெண் புளோக் பி அடுக்ககத்திலிருந்து கீழே குதித்ததாகவும் தலையில் ஏற்பட்ட காயத்தினால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அந்த பெண் இறந்ததாக Ashari கூறினார். கடந்த எட்டு ஆண்டு காலமாக அந்த இளம்பெண் தமது தாயார் மற்றும் சகோதரியுடன் இங்கு இருந்து வந்தார். அவரது தந்தை தற்போது வங்காளதேசத்தில் இருந்து வருகிறார். அந்த அடுக்ககத்தின் பல்கானியிலிருந்து அப்பெண் குதித்துள்ளார் என்பதோடு அவரது மரணத்தில் எந்தவொரு சூதும் இல்லையென Ashari கூறினார்.