
பெட்டாலிங் ஜெயா, ஏப் 28 – Bandar Sunway வில் அடுக்ககத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ய முயன்ற 18 வயது இளைஞரின் முயற்சியை தீயணைப்பு வீரர்கள் முறியடித்தனர். நள்ளிரவு 12.23 மணியளவில் அந்த இனைஞனின் தற்கொலை முயற்சி குறித்த தகவல் அறிந்து உடனடியாக சுபாங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகள் அந்த அடுக்ககத்திற்கு சென்றனர். அந்த அடுக்ககத்தின் மூன்றாவது மாடியிலுள்ள ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்த இளைஞனிடம் அதிகாலை மணி 2.10 வரை தீயணைப்பு வீரர்கள் பொறுமையாக பேசி அவனது தற்கொலை முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தாக Selangor தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குனர் Morni Mohamad தெரிவித்தார்.