Latestமலேசியா

அடுக்குமாடி வீடமைப்பு திட்டத்தினால் கின்ராரா தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் – DBKL

கோலாலம்பூர், ஜூன் 22 – அடுக்கு மாடி வீடமைப்பு திட்டத்தினால் கின்ராரா தமிழ்ப் பள்ளியின் ஒரு பகுதி வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் DBKL தெரிவித்திருக்கிறது. அந்த வீடமைப்பு திட்டத்திற்கு அருகேயுள்ள சாலையை மேம்படுத்தும் திட்டத்தினால் கின்ராரா தோட்ட தமிழ்ப்பள்ளியின் சில கட்டிடங்கள் உடைபடக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி திடட்த்தினால் கின்ராரா தோட்ட தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதியை இதர இடத்தில் மாற்றுவதற்கு பொருத்தமான இடத்தை அடையாளம் காணும்படி சுபாங் ஜெயா நகரான்மைக் கழகம் , நிலம் மற்றும் சுரங்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேம்பாட்டாளர் முறையான இழப்பீடு வழங்காவிட்டால் தனது நிலத்தின் ஒரு பகுதியை ஒப்படைக்க முடியாது என பூச்சோங்கிலுள்ள கின்ராரா தோட்ட தமிழப் பள்ளி கடந்த மார்ச் மாதம் தெரிவித்ததாக இணையத்தள பதிவேடு ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

அந்த பள்ளியின் 3,000 சதுர அடி நிலத்தை Jalan Mas சாலை விரிவாக்கத்திற்கு கின்ராரா தோட்ட தமிழ்ப்பள்ளி ஒப்படைத்தால் அதற்கு 50,000 ரிங்கிட் இழப்பீடு தருவதாக மேம்பாட்டு நிறுவனம் முன்வந்ததாக தெரிகிறது. சாலை விரிவாக்க பணியினால் அந்த தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி மற்றும் சிற்றுண்டி நிலையம் இடிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் அந்த பள்ளியில் பதிவு செய்துள்ள 700 மாணவர்கள் பாதிப்பை எதிர்நோக்கக்கூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!