ஷா அலாம், பிப் 28 – Setia Alam, Section U 13 இல் அடுக்கு மாடி வீட்டிலிருந்து கீழே
குதித்த இளைஞர் ஒருவர் மாண்டார். சுமார் 20 வயதுக்குட்பட்ட அந்த இளைஞர் கறுப்பு டீ சட்டையும் நீல காற்சட்டையும் அணிந்திருந்தார்.
அந்த ஆடவரைப் பற்றிய அடையாளங்கள் எதுவும் தெரியவில்லையென Shah Alam மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Baharudin Mat Taib தெரிவித்தார்.
அங்குள்ள அடுக்கு மாடி கட்டிடத்தின் B புளோக்கிலிருந்து அந்த இளைஞர் கீழே குதித்துள்ளார். எனினும் அவர் எத்தனையாவது மாடியிலிருந்து கீழே குதித்தார் என்ற விவரம் தெரியவில்லையென Baharudin Mat Taib கூறினார்.