
மத்திய ஜாவா Banjanegara -வில் அடுத்தடுத்து 12 பேரை கொலை செய்த இந்தோனேசிய மந்திரவாதி ஒருவனை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
உண்மையில் அந்த நபர் பலரை கொலை செய்திருப்பதாகவும் அவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை தம்மால் சரியாக நினைவுகூற முடியவில்லையென 45 வயதுடைய Slamet Tohari என்ற அந்த மந்திரவாதி தெரிவித்திருக்கிறான்.
மந்திர சக்தியின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கும் சக்தியை கொடுப்பதாக கூறி பலருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படும் 12 பேரின் உடல்கள் மத்திய ஜாவாவில் அந்த ஆடவருக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
இதுவரை 9 உடல்கள் அடையாளம் காணப்பட்டது.
அவற்றில் 40 மற்றும் 50 வயதுக்குட்பட்ட ஆறு ஆடவர்கள் மற்றும் 25க்கும் 35 வயதுக்கும் உட்பட்ட மூன்று பெண்களின் உடல்களும் அடங்குவர்.