
கோலாலம்பூர், நவ 25 – அடுத்த ஆண்டுக்கான ரி.ம 2.45 பில்லியன் மாநில வரவு செலவுத் திட்டத்தை சிலாங்கூர் மந்திரிபுசார் அமிருடின் ஷாரி இன்று அறிவித்தார். இந்த வரவு செலவு திட்டத்தில் 51 விழுக்காடு தொகை மாநில நிர்வாகத்திற்காகவும் எஞ்சிய 49 விழுக்காடு மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட RM2.34 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடை ஒப்பிடுகையில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் 5 விழுக்காடு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் கணிக்கப்பட்ட 200 கோடி ரிங்கிட் வருமானத்தை ஒப்பிடுகையில் மாநில அரசாஙகம் 45 கோடி ரிங்கிட் பற்றாக்குறையை எதிர்நோக்கும் என அமிருடின் கூறினார். சமூக துறைக்காக 360 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மக்களின் பெருளாதாரம், கல்வி மற்றும் சமூக நலன் முன்னேற்றத்திற்காக இந்த தொகை பயன்படுத்தப்படும் என அமிருடின் தெரிவித்தார்.