
கோலாதிரங்கானு , செப் 13 – மேற்குக்கரை மாநிலங்கள் , சபா மற்றும் சரவாவில் வட மற்றும் இதர பகுதிகளில் பல இடங்களில் அடுத்த வாரம் முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் சபா மற்றும் சரவாக்கில் அதிக அளவில் பரவலாக மழை பெய்யும் என்று திரங்கானு மலேசிய பல்கலைக்கழத்தின் வானிலை ஆய்வு, அறிவியல் மற்றும் சுற்றுப்புற அறிவியல்துறையின் ஆய்வாளர் டாக்டர் சுங் ஜிங் சியாங் தெரிவித்தார். பொதுவாகவே மாலை வேளையில் இடியுடன் கூடிய கடுமையான மழைபெய்யும் என அவர் தெரிவித்தார்.