Latestமலேசியா

நெகிரி செம்பிலானில் 1.5 மில்லியன் ரிங்கிட் தொடர்பு சாதனங்கள் கொள்ளை; 16 பேர் கைது

சிரம்பான், பிப் 29 – Telcos எனப்படும்  தொலைதொடர்பு நிறுவனங்களின்  கோபுரங்களில்  நடந்த திருட்டு சம்பவங்களில்   தொடர்பு  இருப்பதாக  சந்தேகிக்கப்படும்     இரண்டு  பெண்கள் உட்பட  16 பேரை கைது செய்த  போலீசார் 1.5  மில்லியன் ரிங்கிட்  மதிப்புடைய  கேபள்கள் உட்பட பல்வேறு  தொடர்பு சாதனங்களை  பறிமுதல் செய்தனர்.    Taman   Kelab Tuanku வில் உள்ள  ஒரு கோபுரத்திலிருந்து   300 மீட்டர் நீளத்திற்கான நேரடி  இணைப்பு Cable   துண்டிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக  பிப்ரவரி  20ஆம் தேதி போலீஸ் புகாரை பெற்றதோடு அதில்  சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளை பிடிப்பதற்காக சிறப்பு  குழு ஒன்று அமைக்கப்பட்டதாக  சிரம்பான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர்   Hatta Che Din தெரிவித்தார். 

 மறுநாள்  போலீஸ் மேற்கொண்ட  நடவடிக்கையில்   14 ஆடவர்கள் மற்றும்  இரண்டு பெண்கள்  கைது செய்யப்பட்டதோடு தொலை தொடர்பு கோபுரங்களில்  திருடப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  அந்த 14 ஆடவர்களில் ஒருவர் வங்காளதேசியாவார்.   25 மற்றும் 50 வயதுக்குட்பட்ட அந்த சந்தேகப் பேர்வழிகளில்  நால்வர்  பல்வேறு குற்றங்களில்  சம்பந்தப்பட்டுள்ளனர்.   DC  கேபல்களைத் தவிர்தது    Radio  remote   யூனிட்டுகள் மற்றும்   Lithium  பேட்டரிகளையும்  அவர்கள்  திருடியிருப்பதாக  Hatta Che Din  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!