கோலாலம்பூர், ஏப்ரல் 12 – நாட்டின் 14 பகுதிகளில் குறிப்பாக பெர்லிஸ், கெடா, கிளந்தான், சரவாக், மற்றும் சபா ஆகிய பகுதிகளுக்கு, வெப்பமான வானிலை இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையமாக MetMalaysia.
இப்பகுதிகளில் 37 ℃ டிகிரி செல்சியஸ் முதல் 40 ℃ டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப அலைகளை எதிர்பார்க்கலாம் என்று அது அறிவித்துள்ளது.
தீபகற்பத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான லங்காவி, பென்டாங், குவாலா மூடா, குபாங் பாசு, போகோக் சேனா, சிக், பாலிங் மற்றும் கெடாவில் பண்டார் பாரு; கிளந்தானில் குவா முசாங் மற்றும் பெர்லிஸ் ஆகிய பகுதிகளிலும் அதிக வெப்பம் உணரப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
அதேபோல, சரவாக்கில் உள்ள முக்கா, தெலாங் உசான் மற்றும் சபாவில் உள்ள துவாரான், தெனோம் ஆகிய இடங்களிலும் அதிக வெப்பநிலை எதிர்பாக்கலாம்.
இதனிடையே தற்போதைய வெப்பமான மற்றும் வறண்ட வானிலை காரணமாக சிலாங்கூர், சரவாக் மற்றும் பகாங் உட்பட நாட்டின் சில பகுதிகளில் நிலக்கரி தீ பற்றிய பல்வேறு புகார்களும், அதீத வெப்ப தாக்கத்தால் ஒருவர் மரணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.