போரோடியன்க் , மார்ச் 4- உக்ரைய்ன் – ரஷ்ய அமைதி பேச்சுக்கள் அடையாளம் தெரிவிக்கப்படாத இடத்தில் நேற்று தொடர்ந்து நடைபெற்றன. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தப்பிச் செல்வதற்கும் சிறப்பு போக்குவரத்து வழிகளை திறப்பது குறித்து இரண்டு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பி.பி.சி தகவல் வெளியிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் உக்ரைய்ன் அதிபரின் ஆலோசகர் Mykhailo Podolyak தெரிவித்தார். போர் கடுமையாக நடைபெற்று வந்தபோதிலும் மருந்து மற்றும் உணவுப் பொருட்களை விநியோகிப்பதிலும் இணக்கம் காணப்பட்டன. இரண்டு தரப்பும் மீண்டும் அடுத்த வாரம் தங்களது பேச்சுக்களை தொடர்வார்கள்.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி16 hours ago