Latestஉலகம்

கொலம்பியாவில், கட்டடத்தின் ஓரத்தில் தலைகீழாக தொங்கிய ஹெலிகாப்டர் ; பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

மெடலின், பிப்ரவரி 29 – கொலம்பியாவில், நான்கு சுற்றுப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, சில வினாடிகள் காற்றில் சுழன்று, விபத்துக்குள்ளாகி, கட்டடம் ஒன்றின் ஓரத்தில் சிக்கி தொங்கியது.

நேற்று கொலம்பியா, மெடலின் நகரிலுள்ள, கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

வானில் பறக்கத் தொடங்கியதும், திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் சில வினாடிகள் வட்டமிட்டு, சில மீட்டர் தொலைவில் இருந்த கட்டடத்தை நோக்கி சரிந்தது.

இரு விமானிகள் இயக்கப்பட்ட அந்த பெல் 206 ரக ஹெலிகாப்டர் பின்னர் அக்கட்டத்தின் தொடர்பு ஆண்டெனாவில் சிக்கி தலைகீழாக தொங்கியது.

சம்பவத்தின் போது அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஐவரை பாதுகாப்பாக மீட்க எழுபதுக்கும் அதிகமான மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு அனுபப்பட்டனர்.

அவ்விபத்தில், கால் முறிவு ஏற்பட்ட விமானி ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை ; மற்றொரு விமானி உட்பட நான்கு பயணிகள் சிராய்ப்பு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவ்விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!