
கோலாலம்பூர், மார்ச் 16 – ஒரு நிறுவனத்தின் அடைவு நிலை மற்றும் அதன் திறன் அடிப்படையில் மட்டுமே குத்தகைக்கான நிறுவனம் தேர்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக்கொண்டார். அனைத்து பெரிய டெண்டர்களை தகுதிபெற்ற நிறுவனம் பெறுவதற்கான கோட்பாடாக இது இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதற்கு முன் டென்டர்களை முடிவு செய்யும்போது இத்தகைய அனுகுமுறைகளை தாம் பின்பற்றி வந்ததாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார். அவர்களது ஆற்றல், திறன் மற்றும் நிதி வளம் ஆகியவற்றின் அடிப்படையில் குத்தகைக்கான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். யாருக்கு குத்தகை வழங்குகிறோம் என்பது தெரியாமலேயே குத்தகைக்கு தகுதி பெறும் நிறுவனத்தை நாம் முடிவு செய்திருக்கிறோம் என நேற்றிரவு வீடமைப்பு சொத்துடமையாளர்கள் சங்கத்தின் ஆண்டு விருந்து நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்யிபோது பிரதமர் இதனை தெரிவித்தார்.