
லபான் ராதா, செப்டம்பர் 23 – அடை மழைக் காரணமாக, நாட்டின் உயரமான கினபாலு சிகரம் “நீழ்வீச்சியாக” மாறி நீர் பெருக்கெடுத்து ஓடியது.
சுற்றுப் பயணிகள் அதனை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
சம்பவத்தின் போது, கினபாலு மலையேறும் நடவடிக்கைக்குப் பொறுப்பேற்றிருந்த மலையேறி ஒருவர் அதனை காணொளியாகப் பதிவுச் செய்து வெளியிட்டுள்ளார்.
மழைக் காலத்தில், கினபாலு மலையில், நீர்வீழ்ச்சியைப் போல நீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம் தான் என கூறப்படுகிறது.