கோலாலம்பூர், ஏப்ரல்-15, நாட்டில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படுவதற்கு 30 முதல் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குழாய்களே முக்கியக் காரணமாகும்.
அந்த ‘பழங்காலத்து’ நீர் குழாய்கள், வடிவமைப்பின் ஆயுட்காலத்தைக் கடந்தவை என, SPAN எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் Charles Santiago கூறுகிறார்.
வருவாய் இல்லாத நீர் (NRW) பிரச்னையில் 70% மேல், குழாய் கசிவினால் ஏற்படுகிறது.
குறிப்பாக, இணைப்புக் குழாய்கள் மற்றும் விநியோக அமைப்பில் உள்ள பழைய AC வகை குழாய்களின் கசிவுகளால் இந்த NRW விகிதம் உயர்வதாக அவர் சொன்னர்.
எஞ்சிய 20-25% வணிக இழப்பு, தண்ணீர் திருட்டு மற்றும் துல்லியமற்ற மீட்டர்களால் ஏற்படுகிறது என்றார் அவர்.
இதையடுத்து, பழையக் குழாய்களையும் கருவிகளையும் மாற்றும் பணிகளை நீர் விநியோக நிறுவனங்கள் கட்டங்கட்டமாக மேற்கொண்டு வருவதாக Charles Santiago கூறினார்.
இந்த AC வகைக் குழாய்களை, mild steel, ductile ion போன்ற மேலும் அதிகக் காலத்திற்குத் தாங்கும் குழாய்களுக்கு மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றுவதற்கு அதிக செலவாகும்; அதாவது 1 கிலோ மீட்டருக்கு சராசரியாக 9 லட்சம் ரிங்கிட் வரையிலும் தேவைப்படும் என கிள்ளான் முன்னாள் MP-யுமான Charles கூறினார்.
தீபகற்பத்திற்கான நடப்பு NRW விகிதம் 34.6% என்றும் அவர் சொன்னார்.