வாஷிங்டன், மார்ச் 1 – உக்ரைய்ன் மீது ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்டு வந்தாலும் அணுஆயுத போர் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லையென அமெரிக்க அதிபர் Joe Biden தெரிவித்துள்ளார்.
அணுஆயுத போர் வரக்கூடும் என்று அச்சம் இருக்கிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தபோது இப்போதைக்கு அப்படியொரு சூழ்நிலை எதுவும் ஏற்படாது என அவர் தெரிவித்தார்.
இதனிடையே நேட்டோ தலைவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனும் அதிபர் ஜோ பைடன் நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார்.
அணுஆயுத எச்சரிக்கை குறித்து புதிய அறிவிப்பு எதனையும் அமெரிக்கா வெளியிட வேண்டிய அவசியம் இல்லையென்றும் வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.