ஜோர்ஜ் டவுன் , நவ 15 – பினாங்கு மாநிலத்திலுள்ள அணைக்கட்டுகளில் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் அம்மாநிலத்திலுள்ள மக்கள் தண்ணீரை விவேகமாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு தண்ணீரை தொடர்ந்து சேமித்து வைக்கும்படி பினாங்கு நீர் விநியோக கழகம் கேட்டுக்கொண்டது.
தீவிலுள்ள அணைக்கட்டுகளின் நீர் மட்டம் உயர்ந்தாலும் அவை நிரம்பவில்லையென பினாங்கு நீர் விநியோகக் கழகத்தின் நிர்வாக அதிகாரி கே.பத்மநாதன் தெரிவித்தார்.
Air Itam அணைக்கட்டில் நீர் மட்டம் 81.5 விழுக்காடும், Teluk Bahang அணைக்கட்டில் நீர் மட்டம் 51. 2 விழுக்காடும் குறைந்துள்ளன. Teluk Bahang அணைக்கட்டு பெரிதாக இருப்பதால் அதை நிரப்புவதற்கு அதிக மழை நீர் தேவைப்படுவதாக அவர் கூறினார்.