ஷா அலாம், மார்ச் 5 – Taman Sri Muda அணைக்கட்டை விரைந்து பழுதுபார்க்கும்படி சிலாங்கூர் வடிகால் நீர்ப்பாசனத்துறையை சிலங்கூர் , கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினரான V.கணபதி ராவ் கேட்டுக்கொண்டார்.
அந்த அணைக்கட்டை உடனடியாக பழுதுபார்ப்பதன் மூலம் தாமான் ஸ்ரீ மூடா வட்டாரத்தில் மற்றொரு பெரிய வெள்ளப் பேரிடர் ஏற்படுவதை தடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். ஷா அலாம் மாநாகர் மன்றத்தின் உதவியோடு அந்த அணைக்கட்டு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது.
அந்த அணைக்கட்டு மிகவும் தாழ்வாக இருக்கிறது. அந்த அணைக்கட்டின் உயரத்தை அதிகரிக்கும்படியும் கணபதி ராவ் வலியுறுத்தினார்.
தாமான் ஸ்ரீமூடாவுக்கு அருகேயுள்ள ஆற்றில் உயரமான அணைக்கட்டை கட்டுவதன் மூலமாகவே கடுமையான மழைக்காலங்களில் ஆற்றின் நீரோட்டம் கரைபுரண்டு ஓடுவதை தடுக்க முடியும் என கணபதி ராவ் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் நீர் பாசனத்துறையின் புதிய இயக்குனருடன் தாம் பேச்சு நடத்தப்போவதாகவும் கணபதி ராவ் கூறினார்.