நியூயார்க், பிப் 10 – அண்டை நாடுகளிமிருந்து பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாக ஐ.நாவிடம் இந்தியா புகார் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான டி.எஸ் திருமூர்த்தி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் எல்லை கடந்த பயங்கரவாதத்தில் நீண்ட காலமாக இந்தியா பாதிக்கப்பட்டு வருவதையும் அவர் விவரித்தார்.
பயங்கரவாதிகள் இன்று சமூக ஊடகங்கள், இலக்கவியல் கட்டண முறைகள், ரகசிய செய்தி சேவைகள், ஆள் இல்லாத விமானங்கள் போன்ற நவீன கருவிகளை பயன்படுத்தி வருவதையும் திருமூர்த்தி சுட்டிக்காட்டினார்.