கீவ் , பிப் 25 – உக்ரைய்னுக்கு எதிரான தாக்குல்களை ரஷ்யா தீவிரப்படுத்திவரும் இவ்வேளையில் உக்ரைய்னிலிருந்து பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர்.
உக்ரைய்னில் மலைப்பகுதி வட்டாரமான Transcarpathia வில் சுமார் 130,000 ஹங்கேரி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அருகேயுள்ள அண்டை நாடான Hungary நாட்டிற்கு கார்களிலும், நடந்தும் மூட்டை முடிச்சுகளுடன் கையில் கிடைத்த முக்கியமான பொருட்களை எடுத்துக்கொண்டு அகதிகளாக புறப்படுகின்றனர்.
பலர் ஏ.டி.எம் மிஷின்களில் கிடைக்கின்ற பணத்தை எடுத்துக்கொண்டு, பேராங்காடிகளில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டனர். பெட்ரோல் நிரப்புவதாக வரிசையாக காத்திருப்பதையும் பார்க்க முடிவதாக உக்ரைய்ன் தகவல்கள் கூறின.