Latestசிங்கப்பூர்

அண்டை வீட்டாரின்  இந்து வழிபாட்டை இடைமறித்தப் பெண் ; போலீஸ் விசாரணை  

சிங்கப்பூர், ஜூன்  11 – சிங்கப்பூரில் இந்திய ஆடவர் ஒருவர், வீட்டின் முன்புறம் மணியடித்து இறைவனை  வழிபட்டுக் கொண்டிருந்தபோது, அண்டை வீட்டுப் பெண்  gong கருவியை வேகமாக அடித்து சத்தம் ஏற்படுத்திய காணொலி வைரலாகியிருக்கின்றது. அந்த சம்பவத்தை போலீஸ் தற்போது விசாரித்து வருகின்றது.

சம்பந்தப்பட்ட அந்த காணொலியை,  லிவனேஷ் ராமு என்பவர்  தனது  ஃபேஸ்புக்  சமூக அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். வாரத்தில் இரு முறை ஐந்து நிமிடங்களுக்கு  இது போன்று தங்களது குடும்பத்தினர் இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கமானதே என அவர் குறிப்பிட்டார்.

தாங்கள்  தற்போது குடியிருக்கும் வீட்டில் 20 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், இதுவரை எந்தவொரு பிரச்சனையையும் தாங்கள்  சந்தித்ததில்லை  என லிவனேஷ் குறிப்பிட்டார்.

தாம் வெளியிட்ட காணொலி தற்போது வைரலாகியிருப்பதை அடுத்து, தாம் போலீஸ்  விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் அவர்  கூறினார். காணொலியில் காணப்பட்ட 48 வயது பெண்ணையும் போலீசார்  விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இவ்வேளையில் அக்குடியரசில் அண்மையில் நிகழ்ந்த சில  இனவாத சம்பவங்களைச் சுட்டிக் காட்டி, அந்நாட்டு அதிபர்  ஹலிமா யாக்கோப், மத நல்லிணக்கம் நலிவடைந்திருப்பது குறித்து  வேதனையை வெளிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!