Latestமலேசியா

அண்டை வீட்டாரை கோயிலுக்கு அழைத்து சென்ற மலாய் பெண்ணை சாடுவதா ?

கோலாலம்பூர், நவ 24 – தனது அண்டை வீட்டுக்காரரை , அருகேயுள்ள கோயிலில் இறக்கி விட்டு, அவர் திரும்பி வரும் வரை காத்திருந்ததாக, தான் பதிவேற்றம் செய்திருந்த காணொளிக்கு , சிலர் எதிர்மறையான கருத்துகள் தெரிவித்ததைக் கண்டு, தான் அதிர்ச்சியுடன் மன வேதனையும் கொள்வதாக, மலாய்க்கார பெண் ஒருவர் கூறியுள்ளார்.

தனது அண்டை வீட்டாரான ஷாலுவை , 3 கிலோமீட்டர் தூரமுள்ள கோயிலில் இறக்கி விடச் சென்றதாக, Nadia Farilla Abdul Rahman, அண்மையில் டிக் டாக்கில் காணொளியை பதிவேற்றம் செய்திருந்தார்.

அந்த காணொளிக்கு சில எதிர்மறையான கருத்துகளைப் பெறத் தொடங்கியதை அடுத்து, அவற்றை தான் அழிக்கத் தொடங்கியதாக அவர் கூறினார். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் எனது நோக்கம் கடவுளுக்கு புரிந்தால் போதுமென கருதினேன்.

ஆனால், தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தாம் பெறத் தொடங்கியதை அடுத்து, தான் மனவேதனைக்கு ஆளாகியதாக, Nadia Farilla Abdul Rahman தெரிவித்தார்.
தனது செயலை விரும்பாத நபர் ஒருவர், அண்டை வீட்டாரை கோயிலுக்கு அழைத்து செல்வதற்கு முன்பு, Ustaz -சிடம் அது குறித்து முதலில் கலந்தாலோசித்தீர்களா ? என கேள்வியெழுப்பியதாக குறிப்பிட்டார்.

அதே வேளை, 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருந்த அவரது காணொளிக்கு பலர் ஊக்கமூட்டும் கருத்துகளையும் பதிவிட்டிருந்தனர்.

“ஒருவருக்கு உதவி செய்வதால், முஸ்லீம் எனும் தன்மையை ஒருவர் இழப்பதில்லை ; மாறாக நல்ல முஸ்லீம் என்ற பெயரையே நீங்கள் பெறுகிறீர்கள்”

“ இதுவே மலேசியர்களுக்கான அழகு. அந்த அழகான உறவை அழிக்க யாருக்கும் இடம் தராதீர்கள்” என , பல்வேறு இனத்தைச் சேர்ந்த வலைத்தளவாசிகள் Nadia –விற்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!