
ஜகார்த்தா, ஜூன் 3 – தனது அண்டை வீட்டு குடும்பத்தை விரட்டி விட்டு, அந்த வீட்டை அபகரிக்க முயன்ற பெண் ஒருவரின் அருவருக்கத்தக்க செயல் அம்பலமாகிள்ளது.
அப்பெண் தினமும் அண்டை வீட்டு வளாகத்தில் சிறுநீரை ஊற்றும் காட்சி அங்குள்ள CCTV காமிராவில் பதிவாகியுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக, தன் வீட்டை அசுத்தப்படுத்தி அட்டூழியம் செய்த அப்பெண்ணின் செயலால் மன நிம்மதி இழந்திருந்த அண்டை வீட்டுக்காரர் போலிசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரித்ததில், பக்கத்து வீட்டில் முன்பு தனது தங்கை இருந்ததாகவும், அதன் பின்னர் வீடு தற்போது குடியிருக்கும் குடும்பத்திற்கு விற்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் அந்த வீட்டை தான் வாங்க நெடுநாட்களாகவே எண்ணம் கொண்டிருந்ததால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார் அப்பெண்.