சிரம்பான், பிப் 3 – சீனப் புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு போர்ட் டிக்சன், தெலுக் கெமாங் ( Teluk Kemang ) கடற்கரைப் பகுதியில் மக்கள் அதிகம் கூடியிருந்த நிலையில், சிறு வியாபாரிகளின் கூடாரங்களும் அதிகரித்திருந்தன.
அதையடுத்து சுற்றுலா தளமான அந்த கடற்கரைப் பகுதி விவசாய சந்தையைப் போல் காட்சியளித்ததாக, பல தரப்புகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டிருப்பதாக, நெகிரி செம்பிலான் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Aminuddin Harun தெரிவித்தார்.
அந்த புகார்களைத் தொடர்ந்து, அந்த கடற்கரையோரப் பகுதியில்,போர்ட் டிக்சன் நகராண்மைக் கழகம், அமலாக்க நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துமென மெந்திரி பெசார் குறிப்பிட்டார்.