
கோலாலம்பூர், மார்ச் 10 – முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் மீது இன்று காலை , கோலாலம்பூர் Sesyen நீதிமன்றத்தில் மொத்தம் 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
3 நிறுவனங்களிடம் இருந்தும், தனிநபர் ஒருவரிடம் இருந்தும் 23 கோடியே 25 லட்சம் ரிங்கிட்டைப் பெறுவதற்கு பிரதமராகவும், Bersatu கட்சியின் தலைவராகவும் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக முஹிடின் 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
மேலும், Bukhary Equity நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோத நடவடிக்கையின் மூலமாக 12 கோடி ரிங்கிட்டைப் பெற்றதாக , 76 வயதான அந்த அரசியல்வாதி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து முஹிடின் விசாரணை கோரியுள்ளார்.