உலு திராம், மே-17, ஜொகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம ஆடவனின் வெறிச் செயலால் Constable நிலையிலான 2 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.
இன்று அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முகமூடியும் கருப்பு நிறத்திலான உடைகளையும் அணிந்திருந்த மர்ம ஆடவன் பாராங் கத்தியுடன் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்திருக்கிறான்.
அங்கு counter-ரில் இருந்த போலீஸ்காரரைப் பாராங் கத்தியால் அவன் வெட்டியதில், அவர் அங்கேயே உயிரிழந்தார்.
அவரிடமிருந்து சுடும் ஆயுதத்தை அபகரித்துக் கொண்டு அடுத்த போலீஸ்காரரை அவன் சுட்டதில் அவருக்கு வயிற்றிலும் தோள் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டு அவரும் மரணமுற்றார்.
இன்னொரு போலீஸ்காரரும் அத்தாக்குதலில் காயமுற்றதாகக் தெரிகிறது.
சத்தம் கேட்டு பதறியடித்து ஓடி வந்த மற்றொரு போலீஸ்காரர் மர்ப நபரை சுட்டு வீழ்த்தினார்.
சுட்டுக் கொல்லப்பட்ட மர்ம நபர் 30 வயது மதிக்கத்தக்க Radinromyullah bin Radin Imran என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறிந்து வரும் போலீஸ், அவன் மனநலம் பாதிக்கப்பட்டவனா என்ற கோணத்திலும் விசாரிக்கிறது.