Latestமலேசியா

அதிக சூடு, புகை மூட்டம் ஆகஸ்ட் வரை நீடிக்கும் அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பருவ நிலை மாற்றத்தால் நாட்டில் தற்போது வெப்ப நிலை அதிகரித்து மக்கள் சூடு தாங்காமல் பல்வேறு அசெளகரியத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வறட்சி நிலை வருகிற ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் நாட்டில் புகை மூட்டம் ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளதாக இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் தொடர்பான அமைச்சர் Nik Nazmi Nik Ahmad தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருதொற்று காலத்தில் தொழில் துறை முடக்கம் கண்டிருந்ததால் புகை மூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது. தற்போது நாம் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதால் புகைமூட்டம் வருகிற மாதங்களில் திரும்புவதற்கான வாய்ப்பு அதிலம் உள்ளது. தற்போதே தீபகற்ப மலேசியாவில் சில இடங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளது. ஆகையால் இந்த வறட்சி காலத்தை எதிர்கொள்ள எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வயதானவர்கள் மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேண கவனமுடன் செயல்படவேண்டும். பொதுமக்களும் திறந்த வெளியில் எரிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!