
புதுடில்லி. ஜூன் 16 – உலகில் அதிக சுற்றுப்புற தூய்மைக் கேட்டுக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகாளவிய நிலையில் மனித சுகாதாரத்திற்கு தூய்மைக் கேடு மிரட்டலாக இருந்தாலும் இந்தியாவில் தூய்மைக்கேடு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. புதுடில்லியில் தூய்மைக் கேடு பிரச்னை மிகவும் மோசமாக இருப்பதோடு அங்கு குடியிருக்கும் இந்தியர்ளின் சராசரி ஆயுள் 10 ஆண்டு குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.