Latestமலேசியா

அம்னோ – பாஸ் ஒத்துழைப்பிற்கான பேச்சுக்கள் உண்மையாக இல்லை – அகமட் ஸாஹிட்

சைபர் ஜெயா, பிப் 26 – Muafakat Nasional வாயிலாக அம்னோ – பாஸ் கட்சிக்கிடையிலான ஒத்துழைப்பிற்கான பேச்சுக்கள் நடத்தப்படாது. இந்த பேச்சுக்களில் பாஸ் உண்மையாக இல்லாததே இதற்கு காரணம் என அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ Ahmad Zahid Hamidi தெரிவித்திருக்கிறார். பேச்சு நடத்தும் வாய்ப்பு பாஸ் கட்சியிடமிருந்து வந்துள்ளது. எனவே அவர்களது நம்பகத்தன்மையில் நாங்கள் சந்தேகம் கொண்டுள்ளோம்.

ஏற்கனவே Muafakat Nasional லிருந்து பாஸ் கட்சித்தான் விலகிச் சென்றதே தவிர அம்னோ அல்ல. எங்களுடனான உடன்பாட்டை அவகள் முறித்துக்கொண்டது துரோகமாக இருந்தது. பேச்சு நடத்துவதற்கான அவர்களது அழைப்பு உண்மையாக இருக்கிறது என தாம் நம்பவில்லையென Pewaris எனப்படும் ரிஸ்டா மகளிர் அமைப்பை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது Ahmad Zahid இதனைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!