சென்னை, ஜூன் 27 – தமிழகத்தின் அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமையா இரட்டை தலைமையா என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையிலான மோதல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் சென்னையில் நாளை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பானது என பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுதியுள்ளார்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்தின்றி கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் கட்சி தொண்டர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என அவர் கூறியுள்ளார்.