ராசா, மே 3 – அரசாங்கத்தின் மீது பலருக்கும் அதிருப்திகள் இருக்கலாம்.
அதனை வெளிப்படுத்தும் சரியான இடம், 16ஆவது பொதுத் தேர்தல்தான். மாறாக, கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அல்ல என்று ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
தேர்தலை புறக்கணிப்பது யாருக்கும் நன்மை விளைவிக்காது. ஆகையால், அறிவார்ந்த சமூதயமாகச் சிந்தித்து வாக்களியுள்ளங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
அதே வேளையில், மாநில அரசாங்கத்துடன் செயல்பட மத்திய அரசாங்கமும் ஒரே கூட்டணியைச் சேர்ந்தவர்களாக இருப்பது சிறப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கோல குபு பாரு இடைத்தேர்தல் நடைபெற இன்னும் சில நாள்களே எஞ்சியிருக்கும் வேளையில், தேர்தல் களம் சூடு பறந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சோக் தாவ் ராசாவில் நடந்த அந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து பேசினார்.DAP-யின் தலைவர் லிம் குவான் எங், ம.இ.கா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், சிலாங்கூர் UMNO வாரியத் தலைவர் டத்தோ மெகாட் சுல்கர்னைன் ஒமர்டின், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர், உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ப்ரி ஆகியோர் நேற்று நடைபெற்ற ம.இ.கா, தேசிய முன்னணி பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.