
பல்கேரியா, செப்டம்பர் 14 – அதி வேகமாக ஸ்கூட்டர் ஓட்டிய, ஏழு வயது கிளி ஒன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
அந்த ஸ்கூட்டரை ஓட்ட அந்த கிளி எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 14.58 வினாடிகள் மட்டுமே.
சிகோ (Chico) எனும் அந்த கிளி, முதல் முறை ஐந்து மீட்டர் தூரத்தை 17.79 வினாடிகளில் கடந்து முதல் உலக சாதனையை பதிவுச் செய்த வேளை ; ஐந்து நாட்களுக்கு பின்னர் அதே ஐந்து மீட்டர் தூரத்தை 14.58 வினாடிகளில் முடித்து சொந்த சாதனையை முறியடித்ததோடு, புதிய உலக சாதனையையும் பதிவுச் செய்தது.
இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான லோ ஷோ டெய்யில் பங்கேற்று சிகோ அந்த சாதனையைப் படைத்தது.
சிகோ பிறந்து மூன்று மாதங்களிலிருந்து அதனை வளர்த்து வரும் அதன் உரிமையாளரும், பயிற்சியாளருமான யாவாஷேவ் (Yavashev), இதுபோல இன்னும் பல சாகசங்களை சிகோவால் புரிய முடியுமென கூறியுள்ளார்.