ஜப்பானில் ஒவ்வொரு நாளும் 100 தடவையாவது கைப்பேசிக்கு அழைத்து நூதன முறையில் சொந்த மனைவியையே உளவுப் பார்த்த கணவர் கைதாகியுள்ளார்.
ஜூலை மாத மத்தியிலிருந்து அப்பெண்ணின் கைப்பேசிக்கு முன்பின் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன.
எடுத்துப் பேசினால் மறுபக்கம் சத்தம் வருவதில்லை.
விரக்தியில் அவரும் வைத்து விடுவார்.
அனாமதேய எண்கள் என்பதால் அதை அவரால் block செய்யவும் முடியவில்லை.
இப்படியே ஒரு வாரத்திற்குப் போன நிலையில், யார் அப்படி தன்னைத் தொந்தரவு செய்வதென்பதை கண்டறிய அப்பெண் முடிவுச் செய்துள்ளார்.
அந்த அழைப்புகள், தான் தனியாக இருக்கும்போது மட்டுமே வருகின்றன; இரவில் கணவரின் கைப்பேசியில் game விளையாடும் போது வருவதில்லை.
இதனால் கணவர் மீது சந்தேகம் வந்து, அப்பெண் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில் அது கணவரின் செயல் தான் என ஊர்ஜிதமாகி, 38 வயது அவ்வாடவர் stalking செய்த குற்றத்திற்காகக் கைதானார்.
மனைவி மேல் தான் கொண்டுள்ள அதீத காதல் காரணமாகவே கைப்பேசிக்கு அழைத்து மௌனம் காத்து வந்ததாக அந்நபர் விசாரணையில் கூறியுள்ளார்.
Stalking செய்வது ஜப்பானில் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தைக் கொண்டு வரும் குற்றமாகும்.