Latestமலேசியா

அது குழந்தை கடத்தல் அல்ல, போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய சம்பவம்; இரு ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், நவம்பர் 8 – அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலான காணொளி, குழந்தை கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல.

மாறாக, போலீஸ் சோதனையிலிருந்து இரு அந்நிய ஆடவர்கள் தப்பி ஓட முயன்ற காணொளி என்பதை, செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் வான் கமரூல் அஜ்ரான் வான் யூசோப் உறுதிப்படுத்தினார்.

அக்டோபர் 31-ஆம் தேதி, காலை மணி 9.30 வாக்கில், செப்பாங் புத்ராவிலுள்ள, சலவை கடை ஒன்றுக்கு முன்புறம், சந்தேகிக்கும் வகையில் காணப்பட்ட இரு ஆடவர்கள் குறித்து, போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்தை சென்றடைந்த போலீசாருக்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்க அவர்கள் மறுத்ததோடு, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.

எனினும், அதே நாள், பிற்பகல் மணி 1.30 வாக்கில் கைதுச் செய்யல்பட்ட அவர்கள், போதைப் பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்ததாக, கமரூல் அஜ்ரான் சொன்னார்.

பொதுச் சேவை ஊழியரின் பணிக்கு இடையூறை ஏற்படுத்திய குற்றம் தொடர்பில், விசாரணைக்காக அவ்வொருவரும் இம்மாதம் 18-ஆம் தேதி வரையில், 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நெகிரி செம்பிலான், செப்பாங்கிலுள்ள, வீடொன்றின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளையை கடத்திச் சென்றதாக கூறப்பட்ட சாம்பல் நிற ஹோண்டா சிவிக் கார் ஒன்றி, அண்மையில் வாட்ஸ்அப்பில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!