
கோலாலம்பூர், செப்டம்பர் 5 – சீனா நாட்டவர்கள், கூட்டமாக நாட்டின் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ததாக குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருப்பது பழைய காணொளி.
அது மீண்டும் வைரலாக்கப்பட்டுள்ளதாக, தேசியப் பதிவுத் துறை தெரிவித்தது.
தற்சமயம், சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் அந்த காணொளி, உண்மையில் 2018-ஆம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட்டது என்பதையும் தேசியப் பதிவுத் துறை உறுதிப்படுத்தியது.
அந்த காணொளியின் உள்ளடக்கத்தை மறுத்து, அப்பொழுதே தேசிய பதிவுத் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
நாட்டின் அரசியலைப்புச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே, குடியுரிமை மீதான விண்ணபங்களை தேசியப் பதிவுத் துறை நிர்வகித்து வருகிறது.
அதனால், பொது அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிச் செய்ய, அதுப்போன்ற போலி செய்திகளை பகிர வேண்டாம் எனவும், நம்பகத்தன்மையை உறுதிச் செய்துக் கொள்ளுமாறும், தேசியப் பதிவுத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.