
கோலாலம்பூர், மார்ச்-26- MyKad அட்டை வாயிலான Sumbangan Asas Rahmah அல்லது SARA உதவிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
13 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்பட்ட இவ்வுதவியைப் பெற இவ்வாண்டு 5.4 மில்லியன் பேர் தகுதிப் பெற்றிருக்கின்றனர்.
கடந்தாண்டு வெறும் 10 பில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த 5.4 மில்லியன் SARA உதவிப் பெறுநர்களில் 4.7 மில்லியன் பேர் STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவியைப் பெறுபவர்களாவர்.
நடப்பில் SARA உதவியைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 700,000 பேராகும்.
இந்த ரொக்கமில்லா நிதியுதவி ஏப்ரல் 1 முதல், பெறுநர்களின் MyKad அட்டைகளில் சேர்க்கப்படும்.
அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏதுவாக மாதா மாதம் 100 ரிங்கிட் வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் ஏப்ரல் தொடங்கி அது 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
SARA பெறுநர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க இவ்வுதவி துணையாக இருக்குமென நிதியமைச்சின் கருவூல துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ சம்சரி அப்துல் அசிஸ் கூறினார்.