கோலாலம்பூர், பிப் 23 – கோலாலம்பூர், Jalan Kemuning பகுதியில், கட்டத்திற்கு வெளியே உயரத்தில் நின்று கொண்டு பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், புயல் காற்றினால் சற்று நேரம் மரண பயத்திற்கு தள்ளப்பட்டனர்.
அவர்கள் உயரத்தில் நின்றுக் கொண்டிருந்த பகுதி காற்றினால் அங்கும் இங்குமாக வேகமாக அசைந்த காணொளி நேற்று மாலை முதல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது .
இவ்வேளையில், அவர்களை மீட்பதற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்த நிலையில், சம்பவ இடத்தை அடையும் முன்னரே, அந்த தொழிலாளர்கள் தாங்களாகவே கீழே இறங்கி தங்களைக் காப்பாற்றிக் கொண்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு துறை தெரிவித்தது.