
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்டு 30 – கடந்த வாரம் ஜொகூரில் தம்மை வரவேற்க பெரிகாத்தான் நேஷனல் பெரிய அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சி எதையும் ஏற்பாடு செய்யவில்லை என்பதை, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் சனுசி மாட் நோர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே, தம்மை வரவேற்பதை காட்டும் வைரலான வீடியோ உண்மையில்லை என சனுசி கூறியுள்ளார்.
கெடா மாநில மந்திரி பெசாருக்கு வரவேற்பு எனும் வார்த்தைகளை உள்ளடக்கி, அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தாலும், அதற்கும் தமக்கும் தொடர்பு இல்லை எனவும், அந்த வீடியோவை இதற்கு முன் தாம் பார்த்ததில்லை எனவும் சனுசி தெளிவுப்படுத்தினார்.
அதனால், டிக் டொக் சமூக ஊடகத்தில் வைரலாகியிருக்கும் அந்த வீடியோ மீதான விசாரணையை, தாம் போலீசாரிடமே விட்டு விடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஜொகூரில் சனுசிக்கு பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுவதை, கடந்த திங்கட்கிழமை, மாநில போலீஸ், மறுத்திருந்தது.
அதே சமயம், வைரலான அந்த வீடியோ, ஜூலை 15-ஆம் தேதி, தலைநகர், மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒளிப்பதிவுச் செய்யப்பட்டது என அது கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.