Latestசினிமா

அந்நியன் கதை என்னுடையது ; இயக்குநர் ஷங்கர்

சென்னை, ஏப்ரல் 16 – அந்நியன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், அதில் யாரும் உரிமை கோர முடியாது என்றும் இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

தமிழில் வெளியாகி பெரும் வசூலை ஈட்டிய அந்த படத்தினை ஷங்கர்  இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்.

அவரது அந்த முடிவினைத் தொடர்ந்து,  அந்நியன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன், ஷங்கருக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கின்றார்.

எழுத்தாளர் சுஜாதா எழுதிய  அந்நியன் பட கதையின் உரிமையை பணம் கொடுத்து வாங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வேளையில், அந்த நோட்டிஸ்-சால் தாம் அதிர்சியடைவதாக இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அந்த படத்தில் சம்பந்தப்பட்டிருந்த  அனைவருக்குமே, அதன் கதையும் திரைக்கதையும் தனக்கு சொந்தமானது என அனைவருக்குமே தெரியும். மேலும் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவை தமது பெயருடன் தான் அந்தப் படமும் வெளியானது என ஷங்கர், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதில் அளித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!