
குபெர்டினோ, நவம்பர் 10 – அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தாமல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக, இரண்டு கோடியே 50 ஆயிரம் டாலர் இழப்பீட்டை வழங்க அமெரிக்க ஆப்பிள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்காவின் நிரந்தர குடியிரிமை பெற்றவர்களை வேலைக்கு அமர்த்தாமல், புலம் பெயர்ந்த அந்நிய தொழிலாளர்களை ஆப்பிள் நிறுவனம் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதாக அந்நாட்டு நீதித் துறை குற்றச்சாட்டியிருந்தது.
அது அமெரிக்க கூட்டரசு சட்டத்திற்கு புறம்பான ஒரு செயலாகும்.
குறிப்பாக, வேலைக்கான விளம்பரத்தை வெளியிடாமல், சட்டவிரோதமாக அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாக ஆப்பிள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளது.
குடியுரிமை பாகுபாடு குற்றத்திற்காக, அமெரிக்காவில் நிறுவனம் ஒன்றுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய தீர்வுத் தொகையாக அது கருதப்படுகிறது.
இவ்வேளையில், தற்செயலாக நீதித் துறை தரத்தை பின்பற்ற முடியாமல் போனதாக, ஆப்பிள் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.