அந்நிய சுற்றுப் பயணிகளுக்கான SOP விதிமுறைகளில் தற்போதைக்கு மாற்றமில்லை

நாட்டிற்கு வருகைப் புரியும், அந்நிய சுற்றுப் பயணிகளுக்கான SOP நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளில் தற்போதைக்கு மாற்றம் எதுவும் இல்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் கூறியுள்ளார்.
மிக அண்மைய கோவிட்-19 தரவுகளை அடிப்படையாக கொண்டே, SOP விதிமுறைகளில் மாற்றம் செய்வது குறித்து ஆராயப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
சீனா உட்பட அனைத்து நாடுகளின் சுற்றுப் பயணிகளுக்கும் ஒரே மாதியான SOP விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படுகின்றன.
மாறுபட்ட SOP விதிமுறைகளை கடைப்பிடிப்பது ஏற்புடையதாக இருக்காது என குறிப்பிட்ட சைபுடின், எனினும், சுகாதார பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கம் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது எனவும் உத்தரவாதம் அளித்தார்.
நாட்டிற்கு வருகை புரியும் அந்நிய சுற்றுப் பயணிகள் பாரபட்சமாக நடத்தப்படமாட்டார்கள். எனினும் மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுமென இதற்கு முன் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தது தொடர்பில் சைபுடின் இவ்வாறு கருத்துரைத்தார்.