
அந்நிய தொழிலாளர்களுக்கு முறையான தங்குமிட வசதியை ஏற்படுத்தி தராத முதலாளிமார்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ வி. சிவக்குமார் எச்சரித்தார்.
நாட்டின் மனிதவள தேவையை பூர்த்திச் செய்வதற்காக அந்நிய தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை மெத்தமாக கையாள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
அதனால், தொழிலாளர்களின் நலனை பேண தவறும் முதலாளிமார்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும். அது இதர முதலாளிகளுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்றாரவர்.
சிலாங்கூர், கிள்ளானில், அந்நிய தொழிலாளர்களின் தங்குமிடங்களை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இன்று சோதனையிடப்பட்ட இரு தங்குமிடங்கள் முறையான வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதோடு, அளவுக்கு அதிகமான தொழிலாளர்கள் தங்கி இருந்ததும் தெரிய வந்ததாக அமைச்சர் சொன்னார்.