
கோலாலம்பூர், மார்ச் 30 – அனுமதிக்கப்பட்ட அளவைவிட சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் மிகவும் மோசமடைந்தள்ளது. பிப்ரவரி 2 ஆம் தேதிவரை நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் 78,236 கைதிகள் தற்போது தண்டனையை அனுபவித்து வருகின்றனர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார். உண்மையில் சிறைச்சாலைகளில் 66,762 கைதிகள் மட்டுமே தங்கியிருக்க முடியும் . அந்த எண்ணிக்கையை விட தற்போது கூடுதலாக 6,675 கைதிகள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் சைபுடின் சுட்டிக்காட்டினார்.