
கெடா, கொப்பாலா பாத்தாசில், அனுமதியின்றி திறக்கப்பட்ட பெர்த்தாம் நீர் விளையாட்டு பூங்கா அதிகாரிகளால் மூடப்பட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அந்த விளையாட்டு பூங்காவை உடனடியாக மூடுமாறு, செபராங் பெராய் நகண்மைக் கழகம் உத்தரவிட்டது. இம்மாதம் 15-ஆம் தேதி செயல்படத் தொடங்கிய பெர்த்தாம் நீர் விளையாட்டுப் பூங்காவிற்கு வருகை புரிந்த அதிகாரிகள், பாதுகாப்பு கருதி அதனை உடனடியாக மூட உத்தரவிட்டனர். எனினும், அந்த உத்தவை மீறி, அனுமதியின்றி கடந்த ஆறு நாட்களாக அந்த நீர் விளையாடு பூங்கா செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. ஒன்பது கோடி ரிங்கிட் செலவில், வடிவமைக்கப்பட்ட அந்த நீர் விளையாட்டு பூங்கா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள வேளை; அது திடீரென மூடப்பட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.