
கோலாலசிலாங்கூர், ஜன 21 – கோலாசிலாங்கூர் , Jalan Ijok – கில் அனுமதியின்றி செயல்பட்ட மறுசுழற்சி பொருள் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. துர்நாற்றத்தை வெளிப்படத்தி வந்த அந்த தொழிற்சாலையில் கோலாசிலாங்கூர் நகரான்மைக் கழகத்தின் 23 அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சிலாங்கூர் சுற்றுச் சூழல்துறை மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையக அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அந்த சோதனை நடத்தப்பட்டதாக கோலாசிலாங்கூர் நகரான்மைக் கழக அமலாக்கத்துறையின் இயக்குனர் Mohamad Lutfi Mislah தெரிவித்தார். கிராமப் பகுதியில் அந்த சட்டவிரோத தொழிற்சாலை செயல்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையை உடனடியாக மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.